கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கினர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி, அதிகாலை ஒரு மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தமிழகம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தைத் தொடங்கினர். மேலும்பக்தர்கள் அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் 16 இடங்களில் தற்காலிகக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
















