நாடுபிடிக்கும் ஆசையில் இங்கு ஹிந்துமத புனித நூல்களை இழித்துப்பேசி வருகின்றனர் எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
திமுகவின் இளைஞரணி மாநாட்டுக்கான மோட்டார் பைக் பேரணியை துவக்கி வைத்த மு.க. ஸ்டாலின் நான் பெரியார் பேரன் என்றார்! கருணாநிதியின் பேரன் என்று சொன்னால் கேவலம் என கருதுவதால், ”நான் பெரியாரின் பேரன்” என்று ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி சொல்லியுள்ளார்! என்று நாம் சொன்னால், அவர்கள் அதை மறுப்பார்கள்! ஹிந்துமத அழிப்பு என்னும் ஈ.வே.ராவின் கொள்கை காரணமாகவே பெரியாரின் பேரன் என தன்னை குறிப்பிட்டதாகத்தான் உதயநிதி விளக்கம் தருவார் என நாம் நம்புகிறோம்!
இந்த ஹிந்துமத எதிர்ப்பு என்னும் கொள்கையை ஈ.வே.ரா அவர்கள் எங்கிருந்து எடுத்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்! 1867 டிசம்பர் மாதம் 9 ம் நாள் என தேதி இடப்பட்ட மேக்ஸ்முல்லர் அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், “ ஹிந்துமத புனித நூல்களுக்கு தவறான அர்த்தம் எழுதி, ஹிந்துக்கள் தங்கள் மதத்தின்மீது நம்பிக்கை இழக்க செய்வதற்காக, தான் இந்தியா அனுப்பப்பட்டதாக கூறியுள்ளார்!
1838 ல் இந்தியா வந்த ஹார்டுவெல் என்னும் பாதிரி ஹிந்துமத நூல்களில் ஆரியர் திராவிடர் என இருவகை இனங்கள் இருக்கிறது, கோயிலில் பூஜை செய்யும் பிராமணர்கள் ஆரியர்கள், அவர்கள் உங்களின் எதிரிகள், அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், நீங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், நீங்கள் அவர்களை கோயிலைவிட்டு வெளியேற்றுங்கள் நாட்டை விட்டே அவர்களை விரட்டி அடியுங்கள்! அவர்கள் பூஜிக்கும் கடவுளை வணங்காதீர்கள்”- என்றெல்லாம் சொன்னார்!
இவ்வளவுக்கும் இந்த ஹார்டுவெல் வெளியில் இருந்து வந்தவன்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்! வெளியில் இருந்துவந்த பாதிரி பிராமணன் வெளியில் இருந்து வந்தவன் அதனால் அவனை அடித்து விரட்டுங்கள் என சொன்னதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு சிலரது மூளை சிந்திக்கும் திறன் அற்றதாக இருந்திருக்கிறது!
கண்ணன் தனது நண்பனான அர்ஜுனனை ”ஆரியன்” என்றுதான் குறிப்பிடுகிறார்! ஆரியன் என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு உயர்ந்தவன், மேன்மையானவன் என்பது பொருளாகும்!
ஆரியன் என்னும் சொல்லில் உயர்ந்தவன் என்னும் பொருளில் யாரை வேண்டுமானாலும் நாம் குறிப்பிடலாம்! திராவிடம் என்பது நாட்டின் தென்பகுதி என பொருளாகிறது! திராவிடம் என்பது இனமல்ல இடம்!
மேக்ஸ்முல்லரிடம் சொல்லப்பட்டதைப்போல ஹார்டுவெல்லிடமும் சொல்லப்பட்டிருக்கும்! புனித நூல்களை படித்த ஹார்டுவெல் இந்த இரண்டு வார்த்தைகளை எடுத்து வைத்துக்கொண்டு, விளையாடிவிட்டார்! அவர் சொன்னதுதான் திராவிட ஆரிய வாதம்! அந்த வாதத்தை குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்று டாக்டர். அம்பேத்கர் சொன்னார்!
இந்த ஆரிய-திராவிட வாதம் எதற்காக சொல்லப்பட்டது என்றால்-, மேக்ஸ்முல்லருக்கும் ஹார்டுவெல் போன்ற பாதிரிகளுக்கும் “ஹிந்து நூல்களுக்கு தவறான பொருள் எழுதி, ஹிந்துக்களை தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இழக்க செய்யுங்கள்” என இங்கிலாந்தில் இருந்து ஏன் அரிவுரை வழங்கப்பட்டது என்றால்-, ஹிந்துக்களை கிருஷ்தவர்களாக மதம் மாற்றுவதற்காகத்தான்!
ஹார்டுவெல்லின் சீடனாக மாறி ஹிந்துமதத்தை அழிக்க துவங்கியவர்தான் ஈ.வே.ரா அவர்கள்! இப்போது ஹிந்துமதத்தை அழிக்கத்துவங்கியிருக்கும் உதயநிதி தன்னை கருணாநிதி பேரன் என சொல்லாமல் ஈ.வே.ரா.பேரன் என சொல்கிறார்!
இவர் ஈ.வே.ரா.பேரனோ ஹார்டுவெல்லின் லொல்லு பேரனோ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும், ஆனால் “ ஹிந்துக்களின் புனித நூல்களுக்கு தவறான பொருள் எழுதி, இந்துமதத்தின் மீது ஹிந்துக்களுக்கு நம்பிக்கை இன்மையை உருவாக்குங்கள் என இங்கிலாந்தால் பணிக்கப்பட்ட மேக்முல்லர் என்ன ஆனார்? என தெரிந்துக்கொள்வதற்குள் நமது கவிஞர் கன்ணதாசன் சொன்னதை நாம் பார்க்கவேண்டும்!
கண்ணதாசன் சொன்னார் “ ஹார்டுவெல்லின் திட்டப்படி பிராமணர் எதிர்ப்பிலும் ஹிந்துமத ஒழிப்பிலும் ஊறிக்கிடந்த திராவிடக்கழகத்தில் நான் மதிமயங்கி இருந்த காலத்தில், ராமாயணப்புத்தகத்தை என்னிடம் கொடுத்து, இந்த புத்தகத்தை படித்து அதில் வரும் சீதையை கேவலமாக பேசி ஹிந்துக்களை இழிவு செய்ய வேண்டும் என்று, சொன்னார்கள், நானும் சரி என சொல்லி புத்தகத்தை படிக்கத்துவங்கினேன்! ராமாயணத்தை படிக்க படிக்க ராமன் என்னை கவர்ந்துவிட்டான், ராமன் இறைவன் என அறிந்தேன்! சீதையை அன்னையென உணர்ந்தேன்! நான் ஹிந்துமத பற்றாளனாக மாறிவிட்டேன்” என்றார்!
இதே நிலைதான் மேக்முல்லருக்கும் நேர்ந்தது! ஹிந்துமத நூல்களை படித்துவிட்டு மேக்முல்லர் “ உலக மொழிகளின் தாய் சமஸ்கிருதம்” என்றார்! “ மேலை நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் சமயக்கொள்கைகள் கூளாங்கற்களுக்கு சமமென்றால் ஹிந்துமத கொள்கைகள் மாணிக்க கற்களுக்கு நிகரானவை” என்றார்!
“நமக்கு கணிதம் கற்றுக்கொடுத்தவர்கள் இந்தியர்கள்” “அறிவு அனைத்திற்கும் இருப்பிடம் இந்தியா” “உலகின் குரு இந்தியா” என்றெல்லாம் ஹிந்துமதத்தையும் இந்தியாவையும் புகழ்ந்துத்தள்ளினார் மேக்முல்லர்!
வெளிநாட்டில் பிறந்த மேக்முல்லர் கண்ணதாசனாக மாறினார்! இந்தியாவில் பிறந்த சிலர் எட்டையப்பர்களாகவே வாழுகிறார்கள்! கருணாநிதி “இந்து என்றால் திருடன்” என்றார்! கருணாநிதியின் மகன் ஸ்டாலின் “இந்துமத சடங்குகள் கேவலமானவை” என்றார்! ஸ்டாலின்மகனும் கருணாநிதியின் பேரனும், இப்போது நான் ஈவேரா பேரன் என சொல்லிக்கொள்பவருமான உதயநிதி ”சனாதன ஹிந்துமதத்தை அழிப்பேன்” என்கிறார்!
நாடுபிடிக்கும் ஆசையில் ஹிந்துமத புனித நூல்களை இழித்துப்பேச முற்பட்ட அன்னியர்களின் அறிவுரையை ஒரு அன்னியரான மேக்ஸ்முல்லரே ஏற்காமல் புகழ்ந்துப்பேசிய நிலையில், இங்கு சில எட்டையப்பர்கள் அன்னியர்களின் கொள்கையை உயர்த்திப்பிடித்து ஹிந்துமதத்தை அழிப்பேன் என்பதை கண்டிக்க வார்த்தைகள் உள்ளன! ஆனால் அந்த வார்த்தைகளை இங்கு பயன்படுத்தினால், கட்டுரை அசிங்கமாகிவிடும்! ராமராகவும் சீதையாகவும் வாழ்ந்து இந்த தேசத்தை காப்போம்! ராவண தாசர்களை ஒழிப்போம்! எனத் தெரிவித்துள்ளார்.