சென்னை கிழக்கு வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உதவி செய்தார்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது.
சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் முடங்கியுள்ளனர்.
சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் இன்னும் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் இந்தப் பகுதியில் மின்சாரம், செல்போன் சேவை இன்னும் கிடைக்கவில்லை. ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணியை ராணுவம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை 4வது பிரதான சாலை,
சென்னை கிழக்கு வேளச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதித்த மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். மேலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட தி நகர், சைதாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பதிகளை அண்ணாமலை பார்வையிட்டு மக்களுக்கு உணவை வழங்கினார்.