அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நகரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நகரில் சுமார் 60-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கி.மீ. தொலைவில் உள்ள பாலத்தில் மோதி விபத்துக்குளாகி, பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உள்ள ஓடையில் விழுந்தது.
தகவலறிந்து போலீஸாரும், மீட்புப்படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இச்சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.