ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது.
அர்மேனியாவில் உள்ள யெரெவான் நகரில் உலக குத்துச்சண்டை ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பாயல், அர்மேனியாவின் பெட்ரோசியன் ஹெகினேவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் அப்துல்லாவா ஃபரினோஸை வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றார்.
அதேபோல் 70 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அகன்ஷா 5-0 என்ற கணக்கில் ரஷ்யாவின் டைமசோவாவையும் வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார்.
54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமிஷா, 57 கிலோ எடைப் பிரிவில் வினி, 63 கிலோ எடைப் பிரிவில் ஷிருஷ்டி சாதே, 80 கிலா எடைப் பிரிவில் மேகா, 80 எடைப் பிரிவில் பிராச்சி டோகாஸ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
46 கிலோ எடைப் பிரிவில் நேகா லுந்தி, 50 கிலோ எடைப் பிரிவில் பாரி, 66 கிலோ எடைப் பிரிவில் நிதி துல், 75 கிலோ எடைப் பிரிவில் கிருத்திகா ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.
ஆடவர் பிரிவில் ஜதின் 54 கிலோ எடைப் பிரிவிலும், சாஹில் 75 கிலோ எடைப் பிரிவிலும், ஹர்திக் பன்வார் 80 கிலோ எடைப் பிரிவிலும், ஹேமந்த் சங்க்வான் 80 கிலோ எடைப் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
48 கிலோ எடைப் பிரிவில் சிகந்தர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் வென்றது.