சனாதன தர்மத்திற்கு எதிராகவும், ஹிந்து மதத்திற்கு எதிராக இனி பேசினால், மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தமிழக பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள X பதிவில், வெலவெலத்து, அஞ்சி, நடுங்கி, பயந்து, அச்சப்பட்டு ‘மாட்டு மூத்திரம்’ என்று தி மு க மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் குறிப்பிட்டதை திரும்பப் பெற செய்து, அதை கண்டித்தும் இருக்கிறார் அறிவாலயம் தலைவர் மு.க.ஸ்டாலின்.
வெலவெலத்து, அஞ்சி, நடுங்கி, பயந்து, அச்சப்பட்டு 'மாட்டு மூத்திரம்' என்று தி மு க மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் குறிப்பிட்டதை திரும்பப் பெற செய்து, அதை கண்டித்தும் இருக்கிறார் @arivalayam தலைவர் @mkstalin அவர்கள்!
உண்மையை புரிந்து கொண்டு, சனாதன தர்மத்திற்கு எதிராக…
— Narayanan Thirupathy (@narayanantbjp) December 5, 2023
உண்மையை புரிந்து கொண்டு, அதாவது ஹிந்து மதத்திற்கு எதிராக இனி பேசினால், மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், கடந்த பல தசாப்தங்களாக, தொடர்ந்து ஹிந்துக்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை அவதூறு செய்த இயக்கத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அப்படியே உணர்ந்தாலும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.