சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 170-வது படத்தின் படப்பிடிப்பில், நடிகை ரித்திகா சிங் பலத்த காயமடைந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தலைவர் 170-வது படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பூஜையுடன் துவங்கி, முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில், அங்குப் படப்பிடிப்பு முடிந்த பின்னர் கன்னியாகுமரி, மும்பை, ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றது.
மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்துடன் அவருடைய நீண்ட நாள் நண்பரான அமிதாப்பச்சன் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து நடித்து வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ஜெய்பீம்’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குநர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் உள்ள பிரபல பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராணா, பகத் பாஸில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், போன்ற பல நடித்து வருகின்றனர்.
மேலும் ரித்திகா சிங் இந்த படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் சண்டைக் காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்ததில் அவருடைய கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது, இந்த படத்தில் கடுமையான சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தபோது எனக்கு கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஓநாய் மனிதருடன் சண்டை போட்டது போல் உணர்கிறேன், சூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னை எச்சரித்துக் கொண்டுதான் இருந்தார்.
ஆனால் ஆக்சன் காட்சிகளில் நடிக்கும் போது இதெல்லாம் சகஜம் தவிர்க்க முடியாத ஒன்று என்னுடைய கட்டுப்பாட்டை நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்து விட்டது என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.