இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் டி20 தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய பெண்கள் மற்றும் இங்கிலாந்து பெண்களுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணி வீராங்கனைகள் :
ஹர்மன்ப்ரீத் ( கேப்டன் ), ஸ்மிருதி மந்தனா, ஷாபாலி வர்மா, ஜெமிமா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஷ்ரேயன்கா பட்டில், கனிகா, பூஜா வஸ்திரகர், ரேணுகா சிங், சைகா இஷாக்.
இங்கிலாந்து அணி வீராங்கனைகள் :
ஹீதர் நைட் ( கேப்டன் ), டேனி வியாட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர்-பிரண்ட், எமி ஜோன்ஸ், ஃப்ரீயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சாரா க்ளென், லாரன் பெல், மஹிகா கவுர்.