மிக்ஜாம் புயலால் உறவுகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு இரங்கலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனுதாபத்தையும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது X பக்கத்தில், மிக்ஜாம் புயல் தாக்கத்தால் அன்புக்குரிய உறவுகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயபூர்வ அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இயல்புநிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
#மிக்ஜாம்_புயல் தாக்கத்தால் அன்புக்குரிய உறவுகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயபூர்வ அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இயல்புநிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. – ஆளுநர் ரவி
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 6, 2023