மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு சிபிஆர் பயிற்சி!
Sep 27, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு சிபிஆர் பயிற்சி!

Murugesan M by Murugesan M
Dec 6, 2023, 07:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எந்த ஒரு நோயாளிக்கும் மாரடைப்பு ஏற்பட்டவுடன் உடனே சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம் என்றும் அதற்கு சிபிஆர் எனப்படும் இதய நுரையீரல் புத்துயிர் நடைமுறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி மிக முக்கியமானது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதய நுரையீரல் புத்துயிரூட்டல் எனப்படும் சிபிஆர் பயிற்சி குறித்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் நாடு தழுவிய பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது

இந்த நிகழ்ச்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் தொடங்கி வைத்தார். மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாரடைப்பு சிகிச்சைக்கான முதலுதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முன்முயற்சி பாராட்டத்தக்கது.

நல்ல இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதும் முக்கியமானது. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, சிபிஆர் நுட்பத்தில் முதலுதவி அளிக்கப்பட்டால் அது உயிர்களைக் காப்பாற்ற உதவும்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி தேவைப்படுவதால் இந்த சிபிஆர் நுட்பம் முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு, போதிய அறிவு மற்றும் பயிற்சியுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றார்.

தேசிய அளவில் நடத்தப்படும் நாட்டின் முதல் சிபிஆர் விழிப்புணர்வு இயக்கம் இதுவாகும். இந்த இயக்கத்தின் போது, மாணவர்கள், மருத்துவத் துறையினர் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags: Central Minister
Share
Tweet
SendShare
Previous Post

சனாதன தர்மத்தை காங்கிரஸ் தொடர்ந்து இழிவுபடுத்துகிறது! – அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

Next Post

புயலுக்கு பலியானவர்களுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்!

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies