பந்துவீச்சாளர் ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஆண்கள் பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.
இதற்கு முன்பு வரை இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் நீடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த முதலிடம் இந்திய வீரர் கைக்கு வந்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடித்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10 யில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்.
பேட்டர்கள் தரவரிசையில் 56 இடங்கள் முன்னேறி 7 ஆம் இடத்தை பிடித்தார் இந்திய இளம் வீரர் ருதுராஜ். முதலிடத்தில் சூர்யகுமாரும், இரண்டாம் இடத்தில் முகமது ரிஸ்வானும் உள்ளனர்.