டிசம்பர் 19-ம் தேதி 15-வது இந்தியா - ரஷ்யா வணிக உரையாடல்!
Sep 9, 2026, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிசம்பர் 19-ம் தேதி 15-வது இந்தியா – ரஷ்யா வணிக உரையாடல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 6, 2023, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா-ரஷ்யா இடையேயான 15-வது வணிக உரையாடல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்தியா – ரஷ்யா இடையே இராஜதந்திர ரீதியாக நல்ல உறவு இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே வணிக உரையாடல்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், 15-வது இந்திய – ரஷ்ய வணிக உரையாடல் டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்த உரையாடல், வணிகப் பிரதிநிதிகள், கூட்டாட்சி அமைச்சகங்களின் தலைவர்கள், ஏஜென்ஸிகள் மற்றும் ரஷ்யாவின் தொகுதி நிறுவனங்கள் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், பொது அமைப்புகளை ஒன்றிணைக்கும். இக்கூட்டத்தில், தற்போதைய நிலை மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டின் வாய்ப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான அமர்வாக இருக்கும்.

இதுகுறித்து ரஷ்யாவின் வெளிநாட்டு பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளுக்கான துறைத் தலைவர் செர்ஜி செரெமின் கூறுகையில், “ரஷ்யாவும் இந்தியாவும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு மற்றும் ஆற்றலைக் கொண்ட நாடுகள். இரு நாடுகளும் பொதுவான குறிக்கோள்கள் மற்றும் அபிலாஷைகளால் ஒன்றிணைக்கப்பட்ட நம்பகமான பங்காளிகள். ஆகவே, இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன” என்றார்.

இக்கூட்டத்தில், போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாடு, மெகாசிட்டிகளின் நிலையான வளர்ச்சி, இயந்திர பொறியியல், இரசாயனத் தொழில், மருந்துகள், உலோகம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஆற்றல், நிதி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும், நிதி ஒத்துழைப்பு, மருந்துகள் மற்றும் சுகாதாரம், புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர், வர்த்தகம் மற்றும் தளவாடங்கள், சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் இ-காமர்ஸ் உள்ளிட்ட கூட்டு நடவடிக்கைகளின் பல்வேறு பகுதிகள் குறித்தும் இந்த நிகழ்வில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில், “சினெர்ஜிகளை உருவாக்குதல்: போக்குவரத்து மேலாண்மை, தளவாடங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் ஒருங்கிணைப்பு” என்கிற அமர்வை டி.வி. பிரிக்ஸ் தலைமை ஆசிரியர் க்சேனியா கோமிசரோவா நடத்துவார் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்நிகழ்வின்போது, ​​இரு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் எரிசக்தி, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் வணிக ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வணிக உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பான பிரச்சனைகளையும் இந்நிகழ்வு விரிவாக எடுத்துரைக்கும்.

இந்த நிகழ்வில், சுமார் 600 ஆஃப்லைன் பங்கேற்பாளர்கள் மற்றும் 20 முதல் 25 பேச்சாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: IndiarussiaBussiness dialogue
Share
Tweet
SendShare
Previous Post

டி20 தரவரிசையில் : ரவி பிஷ்னோய் முதல் இடம்!

Next Post

சென்னையில் வெள்ளம்! ஆய்வு செய்ய வருகிறார் ராஜ்நாத் சிங்!

Related News

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies