வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க ஜம்மு காஷ்மீர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
• வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நிலையான வருமானத்தை ஈட்டும் தொழில்களை ஏற்படுத்தி பல்வேறு துறைகளில் சுயதொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 7.4 லட்சம் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
• இளையோர் இயக்கத் திட்டத்தின் கீழ் மும்கின், தேஜஸ்வினி, தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டம் போன்ற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
• வேலையற்ற இளைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்காக யூனியன் பிரதேச மற்றும் மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் எண்ணிக்கை 151 ஆகும். அவற்றில் மொத்தம் 1631 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 2023-24-ம் நிதியாண்டில் இளைஞர்களிடையே உள்ள திறன் இடைவெளிகளைக் குறைக்கும் வகையில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
• 2020 முதல் 2023 வரை (அக்டோபர் வரை) மொத்தம் 4,74,464 விண்ணப்பதாரர்கள் தொழில் ஆலோசனை அமர்வுகளிலும், மொத்தம் 2,12,109 விண்ணப்பதாரர்கள் தொழில் வழிகாட்டலுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர்.
• ஆகஸ்ட் 2019 முதல் தற்போது வரை அரசுத் துறையில் மொத்தம் 31,830 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
• ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தொழில் வளர்ச்சிக்கான புதிய மத்தியத் திட்டத்தை மத்திய அரசு 19.02.2021 அன்று ரூ.28,400 கோடி மதிப்பீட்டில் அறிவித்தது.
• ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை முதலீட்டாளர்களுக்கு உகந்த இடமாக மாற்ற பல்வேறு கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.