இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் மற்றும் இங்கிலாந்து பெண்களுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபியா டங்க்லி மற்றும் டேனி வியாட் களமிறங்கினர். இதில் முதல் ஓவரில் 4 வது பந்திலேயே சோபியா டங்க்லி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் டேனி வியாட் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.
இதில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 77 ரன்களும், டேனி வியாட் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய எமி ஜோன்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரேனுகா சிங் 3 விக்கெட்களும், ஷ்ரேயன்கா பட்டில் 2 விக்கெட்களும், சைகா இஷாக்1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷாபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.
3 வது ஓவரில் ஸ்மிருதி மந்தனா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் படுமோசமாக இருந்த சமயத்தில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மாவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து நிதானமாக விளையாடி வந்தார்.
நிதானமாக விளையாடி வந்த ஹர்மன் ப்ரீத் 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 21 பந்துகளில் 26 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவரது தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 1 பௌண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 21 பந்துகளுக்கு ஆட்டமிழனிக்க அதுவரை பொறுமையாக விளையாடி வந்த ஷாபாலி வர்மா 9 பௌண்டரீஸ் அடித்து 42 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஃப்ரீயா கெம்ப் மற்றும் சாரா க்ளென் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனால் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வேற்றுப்பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.