வளைகுடா நாடுகளுக்குச் செல்ல ஒரே விசா முறை அறிமுகப்படுத்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் உச்சி மாநாடு கத்தாரில் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் “ஒருங்கிணைந்த சுற்றுலா விசா தொடர்பாக உள்துறை அமைச்சர்கள் குழு மேற்கொண்ட முயற்சிகளை வளைகுடா நாடுகளின் உச்ச கவுன்சில் வரவேற்றது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை அங்கீகரித்தது மற்றும் இந்த விசா முறையை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்துறை அமைச்சர்களுக்கு அதிகாரம் அளித்தது.
இதன்படி,ஏதேனும் ஒரு வளைகுடா நாடுகளில் விசா அல்லது குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்கள் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் சவுதி அரேபியா, எமிரேட்ஸ், ஓமன், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய ஆறு நாடுகளில் ஒன்றில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.