கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆயுதப் படை வீரர்களின் கொடி தினம், இந்தியக் கொடி தினம் என்றும் அழைக்கப்படுகிறது. நாட்டின் எல்லைகளை இரவு பகலாக பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, ஆயுதப் படை வீரர்களின் கொடி நாள் கொண்டாடப்படுகிறது.
ஆயுதப்படை கொடி தினத்தை முன்னிட்டு நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் பதிவில்,
Today, on Armed Forces Flag Day, we honour the courage, commitment and sacrifices of our brave soldiers. Their dedication in protecting our nation is unparalleled. I also urge you all to make contributions to the Armed Forces Flag Day fund. pic.twitter.com/mJRUjmT2JE
— Narendra Modi (@narendramodi) December 7, 2023
இன்று, ஆயுதப்படை கொடி தினத்தில், நமது துணிச்சலான வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம்.
நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு உங்கள் அனைவரையும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.