தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு அடகு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 தொடர், மூன்று ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்காக இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூரூவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் தென்னாபிரிக்கா அடைந்ததும் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணி வீரர்கள் சென்றுள்ளனர். டெஸ்ட் வீரர்கள் பின்னர் தனியாகச் சென்று அணியினருடன் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.