டெல்லி தனியார் மருத்துவமனையில் கிட்னி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மியான்மர் நாட்டை சேர்ந்த சிலர் பணத்திற்காக கிட்னியை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக தங்கள் சிறுநீரகங்களை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்பனை செய்ததாக தெரிகிறது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மியான்மரைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்பனை செய்ய டெல்லிக்கு பறப்பதாக நாளிதழில் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஒருவாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 1641 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.