தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் நநேரத்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள லால் பஹதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
அப்போது முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். துணை முதல்வராக மல்லு பட்டி விகரமர்காவு பதவியேற்றார்.
இந்நிலையில் தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் நநேரத்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசின் முன்னேற்றத்தையும், குடிமக்களின் நலனையும் மேலும் மேம்படுத்துவதற்கான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.