ஆண்டனி திரைப்படத்தில் தான் வாங்கிய அடி, உதை, என அனைத்து உண்மையே என நடிகை கல்யாணி. தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியின் மகள்.
இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்யாணி கதாநாயகியாக நடித்துள்ள ஆண்டனி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான ஜோஷி இயக்கியுள்ளார்.
இதில் நடிகை கல்யாணி ஒரு கல்லூரி மாணவியாக அதேசமயம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையைக் கற்ற ஒரு இளம் பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. அந்த சண்டைக் காட்சிகளில் கல்யாணி பல அடிகளை வங்கியிருப்பார் இரத்த காயம் கூட ஏற்பட்டிருக்கும்.
இந்நிலையில் தான் வாங்கிய குத்துகள், உதைகள்,தான் விட்ட கண்ணீர், அது மட்டுமல்ல தனது புன்னகை எல்லாமே நிஜம்தான் என கூறியுள்ளார் கல்யாணி.
இது குறித்து அவர், “எப்போதுமே ஒரு வசதியான சூழலுக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவது வளர்ச்சிக்கு உதவாது என்பதைத் தாமதமாகத் தான் புரிந்து கொண்டேன்.
படத்தில் என்னுடைய சண்டைக் காட்சிகளின் போது உங்களுடைய ஆரவாரக் கூச்சலும் கைதட்டல்களும் என்னை இன்னும் உற்சாகப்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.