சென்னை வேளச்சேரி பெட்ரோல் பங்க் அருகே மண் சரிவில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி 5 பர்லாங்க் சாலை பெட்ரோல் பங்க் அருகே கட்டுமான பணிக்காக குழிதோண்டும் பணி நடைபெற்ற நிலையில், திடீரென 50 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில், சுமார் 4 முதல் 8 பேர் வரை சிக்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால்4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும், அதில் இருவர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.6 ராட்சத மோட்டார்கள் மூலம் மழைவெள்ளம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பங்க் ஊழியர் நரேஷின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஒருவர் இந்த பள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என கருதப்படும் நிலையில், அவரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.