மிசோராம் முதல்வர் நாளை பதவியேற்பு!
Sep 14, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிசோராம் முதல்வர் நாளை பதவியேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 08:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிசோராம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டு ஹோமா நாளை பதவியேற்கிறார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மிசோராம் மாநிலமும் ஒன்று. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தோ்தல் நடைபெற்றது. மாநிலத்தின் 8.57 லட்சம் வாக்காளா்களில் 82 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின.

இம்மாநிலத்துக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு மாநிலக் கட்சியான சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. இதைத் தொடர்ந்து, சோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வராக கட்சித் தலைவா் லால்டு ஹோமா தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை சந்தித்த லால்டு ஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா். அதன்படி, மாநில முதல்வராக லால்டு ஹோமா நாளை பதவியேற்கிறார்.

74 வயதாகும் லால்டு ஹோமா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாவாா். மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: MizoramCM laldu homa
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் விநோத திட்டம்: ரவிசங்கர் பிரசாத்!

Next Post

வேளச்சேரி மண் சரிவில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies