இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் “கடினமான நிலைப்பாட்டை” கண்டு வியப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அளித்த பேட்டியில்,
பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகள். “பிரதமர் மோடி ஒரு வலுவான தலைவர். மேலும் நாட்டுக்கான நல்லதொரு எந்த காரியத்திற்கும் தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் யாரும் இல்லை.
நாட்டில் உள்ள மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய பிரதமர் “கடினமான நிலைப்பாட்டை” எடுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் கொள்கை புது தில்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான ஆழமான உறவுகளுக்கு உத்தரவாதம் என்று அவர் வலியுறுத்தினார்.