உலகின் முன்னேறிய நாடுகள் வரிசையில் 11 வது இடத்தில் 2014 ல் இருந்த நாடு, இப்போது 5 ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
உணவுக்கு தேவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு உணவு தேடல் பலம் பெறும்! பணத்திற்கு தேவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் பணத்திற்காக உழைத்து அதை அடைவோம்! தேவையே இல்லாமல் தேடினால் நமக்கு எதுவுமே கிடைக்காது!
பிரதமர் நரேந்திர மோடியையும் பாரதிய ஜனதா கட்சியையும் வீழ்த்த என்ன வழி இருக்கிறது என பல அரசியல் கட்சிகள் வழி தேடுகிறார்கள்! மோடியையும் பாஜகவையும் வீழ்த்துவதற்கான தேவை என்ன இருக்கிறது? என்று கேட்டால் எதுவும் இல்லை!
பாஜகவை அப்புறப்படுத்துவதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் அவர்கள் மக்களிடம் கேட்கிறார்கள்! ஆனால் இன்ன இன்ன காரணங்களால் பாஜகவை வீழ்த்த வேண்டும், உங்களின் இன்ன இன்ன தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வதற்காக பாஜகவை வீழ்த்தவேண்டும் அதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் கேட்கவில்லை!
ஓட்டுக்கேட்டதன் அடிப்படை காரணமே இப்படி வலுவிழந்து இருக்கையில் எப்படி மக்கள் வாக்களிப்பார்கள்! ஐந்து மாநில தேர்தல்களில் மூன்றில் பாஜக வெற்றி! ஒன்றில் உள்ளூர் கட்சிகளுக்கிடையேதான் போட்டியே நடந்தது! அதில் ஒரு கட்சி மிசோரத்தில் வென்றது! தெலுங்கானாவில் தனி மனிதனின் வெற்றி! அது காங்கிரசின் வெற்றி அல்ல! அந்த தனிமனிதன்கூட ஆர்.எஸ்.எஸ் என்னும் சங்கத்தில் பயிற்சி பெற்றவர்!
ஏன் இந்த கட்சிகளால் காரணம் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை என பார்ப்போம். இவர்கள் வைத்திருக்கும் காரணங்கள், இவர்களின் குடும்ப வளர்ச்சி, இவர்களின் பணம் சம்பாதித்தல், இவர்களின் தேச விரோத செயல்பாடுகள் மட்டுமே! இதையெல்லாம் சொல்லி வாக்கு கேட்க முடியாதே! எனவே தான் காரணமே சொல்லாமல் மோடியை வீழ்த்தவேண்டும், பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றவேண்டு, அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள்!
மிசோரத்திலும் தெலுங்கானாவிலும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்ததே இல்லை! தேர்தலின்போது ஆளுங்கட்சியாக இல்லை என்றாலும் சதீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் பாஜக முன்பு ஆழுங்கட்சியாக இருந்தது!
மத்திய பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக ஆளுங்கட்சியாக இருந்துதான் தேர்தலை சந்தித்தது! மொத்தத்தில் ஐந்து மாநிலங்களிலும் தேர்தலின்போது பாஜக ஆளுங்கட்சியாக இருந்தது அல்லது எதிர்கட்சியாக இருந்தது! அனைத்து மாநிலங்களிலும் மத்திய ஆளுங்கட்சி பாஜகதான்! எனவே தேர்தல் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜகவின் ஆளுமை தொடர்பில்தான் இருந்தது! அதாவது மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பாஜகவுக்கு இருந்தது!
சேவை செய்யும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட பாஜக மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்தது! சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன சூழ்நிலையில் 100 கோடியை தாண்டி மக்கள் இருந்த சூழலில் வெறும் 4 கோடி பேரிடம் தான் வங்கிக்கணக்குகள் இந்தியாவில் இருந்தது! அதிலும் செல்வந்தர்களே பெரும்பான்மை! ஏழைகளிடம் வங்கிக்கணக்கு இல்லலவே இல்லை!
ஜந்தன் யோஜனா என்னும் பெயரில் வைப்புத்தொகை இல்லாத வங்கிக்கணக்குகளை துவக்கிட பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டார்கள்! இப்போது 50 கோடி இந்தியர்களிடம் வங்கிக்கணக்கு இருக்கிறது! அனைத்து ஏழைகளுக்கும் இப்போது வங்கிக்கணக்கு இருக்கிறது!
அரசு வழங்கும் மானியம், வங்கிகள் வழங்கும் கடன்தொகை, 100 நாள் வேலையின் ஊதியம் என எதுவானாலும் கமிஷனும் இல்லை சுரண்டலும் இல்லை! பணம் அப்படியே பயனாளியின் கணக்கில் சேர்ந்துவிடுகிறது! 11 கோடியே 37 லட்சம் விவசாயிகளுக்கு வருடா வருடம் வங்கிக்கணக்கில் ரூபாய் 6000 த்தை பிரதமர் நரேந்திரமோடி செலுத்துகிறார்!
ஏழைகளுக்கும் வங்கிக்கணக்கு என்னும் புரட்சியின் அடுத்த கட்டமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை! இப்போது இந்தியாவில் தெருவோர வியாபாரிகளும் கீரை விற்கும் அக்காவும்கூட டிஜிட்டல் முறையில்தான் பண பரிவர்த்தனை செய்கிறார்கள்! உலகில் 50 சதவிகித டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியாவில் தான் நடக்கிறது! இது நம்பமுடியாத பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி!
சாலையோர வியாபாரிக்கு ரூபாய் 10,000 முதல், முத்ரா வங்கி என்னும் திட்டத்தில் ஜாமீன் செக்குருட்டி இல்லாமல் ரூ. 2 லட்சம் வரை, விஸ்வகர்மா திட்டத்தில் லட்சம் வரை வட்டியில்லாமலும் அதற்கும் மேலே வருடம் 5% என குறைந்த வட்டியிலும், ஸ்டார்டப், ஸ்டாண்டப் என கோடிக்கணக்கில் வியாபாரம் செய்ய தொழில் செய்ய வாரி வழங்குகிறது மத்திய அரசு!
ஒரு வருடம் ஆறு மாதத்தில் மட்டும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேருக்கு அரசு வேலையை வழங்கியுள்ளது மத்திய அரசு! ஒரு மூட்டை யூரியாவுக்கு மட்டும் 2000 ரூபாய் மானியம் வழங்குகிறது மத்திய அரசு! விவசாய கருவிகள், இலவச சொட்டுநீர் பாசனம் என கருணை காட்டுகிறது மத்திய அரசு!
எ.டி.எம் கார்டு வைத்திருப்போர் அனைவருக்குமே விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு ரூ.2 லட்சம்! நாட்டில் தேவைப்படும் 4 கோடி பேருக்கு மருத்துவ செலவுக்கு வருடம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்குகிறது மத்திய அரசு! 81 கோடியே 37 லட்சம் நபர்களுக்கு இலவசமாக உணவுதானியம் வழங்கிவரும் சூழலில், ஜனவரி 2020 முதற்கொண்டு 2029 வரை 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, கூடுதலாக ஒரு கிலோ பருப்பு என இலவசமாக வழங்க அறிவித்திருக்கிறது மத்திய அரசு!
உலகின் முன்னேறிய நாடுகள் வரிசையில் 11 வது இடத்தில் 2014 ல் இருந்த நாடு, இப்போது 5 ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது! நாடு முன்னேறிவிட்டது! உலகமே இந்தியாவை எதிர்நோக்கி வளரும் சூழல் உருவாகியுள்ளது! நமது பிரதமர் உலகிற்கே தலைவராக உருவெடுத்துள்ளார்! எனவே நம் வளர்ச்சிக்கான அன்னிய முதலீடுகள் வந்து குவிகிறது!
பாரதத்தின் வளத்தை கூட்டி, வாய்ப்புகளை கூட்டி உலக தலைமையில் உயர்த்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்த சூழலில் எதை மக்களிடம் சொல்லி எதிர்க்கட்சிகளால் வாக்கு கேட்க முடியும்? எதிர்கட்சிகளுக்கு தேசப்பற்று இருந்தால், இதற்கும் மேலாக நாட்டுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என அவர்களால் சிந்திக்க முடியலாம், ஆனால் அவர்களுக்குத்தான் தேசப்பக்தியே இல்லையே! இந்திய எதிர்கட்சிகள், தங்களின் குடும்பநல கட்சிகளாக, அன்னியர்களின் கூலிப்படையாக செயல்படுவதால், அவர்களுக்கு இங்கு இடமும் இல்லை, வாயை திறந்து வளர்ச்சி அரசியல் பேச ஒரு வாய்ப்பும் இல்லை!
ஆனால் தமிழகம் வித்தியாசமானது! அது என்னவென்றால், இங்கு எதிர்கட்சிகளுக்கு அரசியல் செய்ய எதுவுமே தேவையில்லை! திமுக பயிற்சிதரும் பொய்களே போதுமானது! திமுகவின் பொய்யை அன்ணாமலையின் அருளால் உடைத்தெறிந்து நாம் வெற்றி காண்பது திண்ணம்! எனத் தெரவித்துள்ளார்.