ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது.
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா குரூப் “சி”யில் இடம் பெற்றுள்ளது. இந்தியா, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்திய அணி நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதியது.
இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்று வந்த ஸ்பெயின் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணியின் சார்பில் கேப்ரே வெர்டீல் மற்றும் ஆண்ட்ரியாஸ் ரபி தலா 2 கோல்களை அடித்தனர். இந்திய அணியின் ரோகித் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.