தான் வித்யார்த்தி பரிஷத்தின் தயாரிப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 69-வது தேசிய மாநாட்டின் தொடக்க நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் பயணத்தைப் பாராட்டிய அவர், தான் அதன் தயாரிப்பு என்று தயக்கமின்றி கூற விரும்புவதாக தெரிவித்தார்.
வித்யார்த்தி பரிஷத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் பல ஆண்டுகளாக வலுவான மற்றும் அசைக்க முடியாதவை என்றும் அவர் தெரிவித்தார்.
‘மாணவர்கள் இயல்பாகவே இளமையாகவும், சுறுசுறுப்பானவர்கள். சில சமயங்களில் பாதையின் பார்வையை இழக்கும் அளவுக்கு ஆர்வத்தால் நிறைந்துள்ளனர். ஆனாலும், வித்யார்த்தி பரிஷத், அதன் அமைப்புக் கட்டமைப்பை மிகவும் வலுவாகவும், சிறப்பாகவும் பராமரித்து அதன் பாதையிலிருந்து விலகிச் செல்லவில்லை என்றும் அமித் ஷா கூறினார்.
எழுபத்தைந்து ஆண்டுகளில் வித்யார்த்தி பரிஷத் தன் வழியை இழக்கவில்லை என்றும் அரசாங்கத்தை வழிதவற விடவில்லை என்றும் சமுதாயத்தை வழிதவற விடவில்லை என்றும் கூறினார். வித்யார்த்தி பரிஷத்தின் அமைப்பு முறை மிகவும் வலுவாகவும் சிறப்பாகவும் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜ்கோட் மாநாட்டில் ஏபிவிபியின் ஊழியராகப் பங்கேற்ற நாட்களை அமித் ஷா நினைவு கூர்ந்தார். தேசிய மாநாட்டின் தலைமை விருந்தினராக இன்று நான் இங்கு வந்திருப்பது எவ்வளவு பெருமையாக இருக்கிறது என்பதை என்னால் உங்களுக்கு விளக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு சவாலுக்கும் முன்னால், மாணவர் பேரவை இமயமலையைப் போல வலுவாக நின்று அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகவும் அமித் ஷா கூறினார். ஏபிவிபியின் கூற்றைப்போல் இன்று ககாஷ்மீர் நமதே, வடகிழக்கு நமதே என்றும் அமித் ஷா தெரிவித்தார்.