பெருவெள்ளமும், மிக்ஜாம் புயலும் சென்னை மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்கு பிறகு, ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது X பதிவில், தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு கடந்த மாதம் பேசும் போது, புயல் நீர் வடிகால் தொடர்பான 98 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது என்றும், ஒரு மணி நேரத்தில் 20 செ.மீ மழையை வெளியேற்றும் திறன் கொண்டதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆனால், தற்போது, அதாவது 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெருமழை, வெள்ளத்திற்குப் பிறகு 42% மழைநீர் வடிகால் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கே.என்.நேரு உறுதிப்படுத்தியுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
பெருவெள்ளம் சென்னை மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்குப் பிறகுகாவது, ஊழல் திமுக அரசு உண்மையைப் பேசுமா? என கேள்வியுள்ளார். மேலும், இது தொடர்பாக, அமைச்சர் கே.என். நேரு பேசிய வீடியோவையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட திமுகவினர் தவித்து வருகின்றனர்.