கண்டுபிடிப்புகள், தரம், நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்! - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்டுபிடிப்புகள், தரம், நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நுகர்பொருள் மின்னணுத் துறையின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.

மின்னணு நுகர்பொருள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 44 வது ஆண்டு விழாவில் மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று  உரையாற்றினார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,

நோக்கங்களை அடைய தொழில்துறைக்கும், அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை உறுதி செய்ய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, சர்வதேச அளவில் ஈடுபடுவது மற்றும் போட்டித்தன்மையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர், தரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு தொழில்துறையினரை வலியுறுத்தினார்.

உயர்தர தயாரிப்புகள் அனைவருக்கும் பயனளிக்கும் என்பதால் நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் நலன்களை மேம்படுத்த தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் மற்றும் தயாரிப்புகளைத் தேர்வு செய்ய நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார், இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் பங்களிக்கிறது என்று  கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும்,  வளர்ந்த நாட்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் பெருமையுடன் பங்கேற்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த சவாலை கூட்டாக ஏற்றுக்கொண்டு இந்த யாத்திரையின் தூதர்களாக மாற நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் என்பது  நமது மனதில் இருந்து காலனிய மனப்பான்மை அகற்றப்பட்டு ஊழல் இல்லாததாக  இருக்கும் என்று கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் நுகர்பொருள் மின்னணுத் துறையின் முக்கியப் பங்கை வலியுறுத்தியவர், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகக் கண்டுபிடிப்புகள், தரம் மற்றும் நிலையான நடைமுறைகளில் கவனம் செலுத்துமாறு பங்குதாரர்களை வலியுறுத்தினார். வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தொழில்துறையின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், அதை மேலும் உயர்த்த அரசின் ஆதரவை மீண்டும் உறுதிசெய்தார்.

Tags: central government ministerUnion Minister Piyush Goyal
ShareTweetSendShare
Previous Post

குண்டும் குழியுமான சாலைகள், பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

Next Post

கலை பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies