பிறந்த நாள் கொண்டாடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி இன்று தனது 77- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீமதி சோனியா காந்தி ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.