ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது . இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டி வங்காளதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
வங்கதேச அணி வீரர்கள் விவரம் :
அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி ( கேப்டன் ), ஜிஷான் ஆலம், சௌதூர் எம்டி ரிஸ்வான், ஆதில் பின் சித்திக், அரிஃபுல் இஸ்லாம், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், அஹ்ரார் அமீன், பர்வேஸ் ரஹ்மான் ஜிபோன், மஹ்புஸூர் ரஹ்மான் ரபி, எம்டி ரஃபி உஸ்ஸாமான் ரஃபி, ரோஹனத் டவுல்லா போர்சன்.
ஐக்கிய அரபு அமீரகம் வீரர்கள் விவரம் :
ஆர்யன்ஷ் சர்மா ( கேப்டன் ), ஷ்ரே சேத்தி, துருவ் பராசரர், ஈதன் டிசோசா, அயன் அப்சல் கான், தனிஷ் சூரி, அம்மார் பாதாமி, மரூஃப் வியாபாரி, ஓமித் ரஹ்மான், அக்ஷத் ராய், ஹர்திக் பாய், அய்மன் அகமது.