மழை நின்று நான்கைந்து நாட்கள் ஆன பின்னரும், சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பாஜக சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மண்டலம் சார்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டோம்.
சென்னை மாநகராட்சி 198 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. லியோ N. சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மழை நின்று நான்கைந்து நாட்கள் ஆன பின்னரும், சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பது, மக்களிடம் உரையாடும்போது அறிய முடிகிறது.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, @BJP4Tamilnadu சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மண்டலம் சார்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டோம்.
சென்னை மாநகராட்சி 198 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. லியோ N. சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்த… pic.twitter.com/6R7qa5P5QM
— K.Annamalai (@annamalai_k) December 9, 2023
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் பல பகுதிகளில் இருக்கிறது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். சென்னை மாநகரம் முழுவதும், பொதுமக்களுக்காக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் அனைத்து தமிழக பாஜக சகோதர சகோதரிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.