சென்னையில் மழை நீர் வழிந்து ஓடுவதற்கு பதிலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் வழிந்து ஓடியதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பெரும் வெள்ளம் தொடர்கதையாகி வருவதாகவும், இதற்கு அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதாக கூறினார்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் தங்கி கல்வி பயில்வதாகவும் ஆனால் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் காரணமாக வேறு மாநிலங்களுக்கு செல்ல அவர்கள் திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடிகால் பணிகளுக்காக நான்காயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் பெருவெள்ளம் வந்தாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என தி.மு.க. அரசு உறுதி அளித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், மழை நீர் வழிந்து ஓடவில்லை, மாறாக 4000 கோடி ரூபாய் தான் வழிந்து ஓடியுள்ளதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.