மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரப்பொருட்களை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கினார்கள்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்ப்பட்டடு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழ்ந்துள்ளன. அதன் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளப் பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ளப் பாதிப்புக்கு ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். மேலும், சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அண்ணாமலை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், பாதிக்ககப்பட்ட சென்னை மேற்கு மாம்பலத்தைப் பார்வையிட்டார். மேலும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரப்பொருட்களை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், அண்ணாமலை ஆகியோர் வழங்கினார்கள்.