கச்சிகுடா மற்றும் செகந்திராபாதிலிருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11-ஆம் தேதி முதல் சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கச்சிகுடாவிலிருந்து டிசம்பர் 11-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில் (வண்டி எண்: 07187) டிசம்பர் 13-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த இரயில் (வண்டி எண்: 07188) கொல்லத்திலிருந்து டிசம்பர் 13-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.45 மணிக்கு காச்சிகுடா சென்றடையும்.
இந்த இரயில் கச்சிகுடாவிலிருந்து மகபூப்நகா், ஸ்ரீராம் நகா், ரேணிகுண்டா, திருப்பதி, பகாலா, சித்தூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, எா்ணாகுளம், கோட்டயம், காயங்குளம் வழியாக கொல்லம் சென்றடையும்.
அதேபோல், செகந்திராபாதிலிருந்து டிசம்பர் 13-ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில் (வண்டி எண்: 07193) மறுநாள் இரவு 11.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த இரயில் (வண்டி எண்: 07194) கொல்லத்திலிருந்து டிசம்பர் 15-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.