2047ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே அமைப்பு உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வருவதாகக் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,
உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது என்றார். புல்லட் ரயிலின் முதல் பிரிவு 3 ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் 4,500 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதே குறிக்கோள் என்றும் கூறினார்.
2013-14ல் ரயில்வே பட்ஜெட் 29 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2 லட்சத்து 40 கோடி ரூபாய் ஆயிரமாக உள்ளது. வரும் ஆண்டுகளில் ரயில்களில் இருந்து வெளியாகும் கார்பன் வெளியேற்றம் நிகர பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதை உறுதி செய்வதிலும் அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
2014 இல் முன்னர் நாட்டில் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவம் இல்லாதிருந்தது என்று கூறினார். 2014 முதல் அரசாங்கம் உள்கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.
2021 முதல் PM கதிசக்தி, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக ரயில்வே மற்றும் சாலைகள் உள்ளிட்ட அமைச்சகங்களை ஒன்றிணைத்துள்ளது.
10 லட்சம் கோடியில் மூலதனச் செலவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் வளர்ச்சியின் மையமாக மாற்றினார் என்று கூறினார்.
அயோத்தி விமான நிலையம் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றார். திட்டத்தை தினமும் கண்காணித்து வருகிறேன் என்றார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தை திறந்து வைப்பார் என்று கூறினார்