எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
எல்லைகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வது தொடர்கதையாகி உள்ளது.
இந்த நிலையில், நாகை மீனவர்கள் 25 பேர் 2 படகுகளில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். மீனவர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளையும், வலைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.