தீண்டாமை ஒழிப்பையும் ஆலய நுழைவுப் போராட்டத்தையும் முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதி இராஜகோபாலாச்சாரியார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சுதந்திரப் போராட்ட வீரரும், உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவரும், சென்னை மாகாண முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த மூதறிஞர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் பிறந்த தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரரும், உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவரும், சென்னை மாகாண முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த மூதறிஞர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிறந்த தினம் இன்று.
தலைசிறந்த வழக்கறிஞராகவும்,… pic.twitter.com/cnKiJOuHXf
— K.Annamalai (@annamalai_k) December 10, 2023
தலைசிறந்த வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கியவர். உலக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர். தீண்டாமை ஒழிப்பையும் ஆலய நுழைவுப் போராட்டத்தையும் முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதி. சுயநலமின்றி பொதுமக்களுக்காக உழைத்த அமரர் ராஜாஜி அவர்கள் புகழை போற்றி வணங்குகிறோம்! எனத் தெரிவித்துள்ளார்.