மலேசியாவில் நடைபெறும் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி 10-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா குரூப் ‘சி’யில் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் இந்தியா, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இதை அடுத்த 1-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், நேற்று இந்திய கனடா அணிகள் மோதியது. இதில், இந்திய அணி 10-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் ஆதித்யா, ரோஹித், அமன்தீப் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.
மேலும், விஷ்ணுகாந்த், ரஜிந்தர், சவுரப், உத்தம் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் சி பிரிவில் 2-வது இடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.