அனைத்து மாவட்டங்களில் நாளை முதல் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் 13.12.2023 அன்று தொடங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04.12.2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (11.12.2023) தொடங்கவிருந்தது.
இந்நிலையில் மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வரும் 13.12.2023 தேர்வுகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சரின் அறிவுறத்தலில் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.