இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே கணித்தவர் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமது எழுத்துக்களால், சுதந்திரப் போராட்டத்தில் வீரம் விதைத்த புரட்சியாளர், பெண்ணுரிமை, சமத்துவம், சமூகநீதி பேசிய முன்னோடி, மண் உள்ள காலம் வரை மறக்க முடியாத நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.

தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்ட தேசியவாதி. பன்மொழி… pic.twitter.com/vTh6Ye8OwW
— K.Annamalai (@annamalai_k) December 11, 2023
தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்ட தேசியவாதி. பன்மொழி வித்தகர். இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே கணித்தவர். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் கனவு, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகி வருகிறது. மகாகவியின் இறவாப் புகழ் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.