வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பாக சுற்றுலாத்துறை சார்பில் ஹைதராபாத்தில் மாநாடு நடைபெற்றது.
இதில் அத்துறையின் அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது, இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறையில் முதலீடுகளை ஈர்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும், அரசு மற்றும் தனியார் கூட்டாண்மை ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சியால் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்தறையை மேம்படுத்த விரைவில் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை நடத்த உள்ளதாக கிஷன் ரெட்டி தெரிவித்தார். தெலங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.