குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்றும் நாளையும் உத்தரப்பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
இன்று வாரணாசியில் நடைபெறும் மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 45-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார். மாலை, லக்னோவில் நடைபெறும் டிவைன் ஹார்ட் பவுண்டேஷனின் (இந்தியா) 27 வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
நாளை லக்னோவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார்.