அயோத்தியில் ஸ்ரீ-ராம ஜென்ம பூமியில்,108 நாட்கள் வேத விற்பன்னர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசம், காஞ்சிபுரம் வந்தபோது விஷ்வ இந்து பரிஷித் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீ சங்கர மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து ஒன்றியங்களுக்கு கலசங்களில் புனித நீர் அனுப்பப்பட்டது.
வியாக்ரபாதர்- முனிவர் ஜீவசமாதி அமைந்துள்ள, “புலி பூஜைசெய்த திருப்புலிவனம் வியாக்ரபுரீஷ்வரர் திருக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, உத்தரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலின் கருவறையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள் நிறைவுற்ற பின்னர் இக்கலச புனித நீரை 200 கலசங்களில் அனைத்து கிராமங்களுக்கும், அனுப்பப்பட்டு அங்குள்ள பழமையான கோவில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு பக்தர்களின் தரிசனத்திற்காக கொண்டு செல்ல உள்ளதாக, உத்தரமேரூர் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தலைவர் கலைமணி கூறினார்.
நிகழ்வின் போது பாஜக உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் செல்வம்,மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி,வள்ளலார் சன்மார்க்க சங்க நிர்வாகி சங்கரன்,சோழனூர் ஏழுமலை,உள்ளிட்ட, இந்து முன்னணி, ஆர்,எஸ்,எஸ், விஷ்வ இந்து பரிஷத், அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.