காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை நடிகர் அனுபம் கெர் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்டில் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இன்று புஷ்கர்நாத் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அவர் எங்காவது மேலே சிரித்துக்கொண்டே இருப்பார் என நம்புகிறேன். ஜெய் ஹிந்த் என தெரிவித்துள்ளார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் புஷ்கர் நாத் பண்டிட் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார். 1990 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீ;ர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி பண்டிட்கள் இனப்படுகொலை மற்றும் நாடு கடத்தப்பட்டதை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் விவரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.