இந்தியாவின் ‘பயோ-எகானாமி’ கடந்த எட்டு ஆண்டுகளில் 10 பில்லியனில் இருந்து 80 பில்லியனாக வளர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள சயின்ஸ் சிட்டியில் ‘பயோடெக்னாலஜி: விக்சித் பாரத்க்கான புத்தாக்கம் மற்றும் ஆரோக்கியத்தின் பாதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற ப்ரீ வைப்ரண்ட் குஜராத் கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வரும் காலங்களில் பயோடெக்னாலஜி என்பது சுகாதாரப் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய அடித்தளமாக மாறும் என்றார்.
பயோ அக்ரிகல்ச்சர் மற்றும் பயோ பார்மாசூட்டிகல்ஸ், பயோ சர்வீசஸ் ஆகிய துறைகள் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் துறைகள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். இந்தியா விரைவில் உலகின் முதல் 10 உயிர்ப் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் என்றார்.
இந்தியாவின் ‘பயோ-எகானமி’ கடந்த எட்டு ஆண்டுகளில் 10 பில்லியன் டாலரிலிருந்து 80 பில்லியன் டாலராக எட்டு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Addressed Pre-Vibrant Gujarat Seminar on Biotechnology.
Elaborated how 🇮🇳 can become Aatmanirbhar in areas like healthcare, food & agriculture by scaling up biotech research & innovation.
Biotechnology sector in India is expanding rapidly under PM @NarendraModi Ji's leadership. pic.twitter.com/AaxSCEfbQ5
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 11, 2023