‘சார்ஸ் கோவிட் 2’ எனப்படும் கொரோனா வைரஸ்கள் 18 மாதங்கள் வரை நுரையீரலில் தங்கியிருக்கக் கூடும் என்று பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நுரையீரல் செல்கள் குறித்து பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வு முடிவுகள், ‘நேச்சர் இம்யூனாலஜி’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கூறியிருப்பதாவது, சில வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்திய பின்னும், கண்டறிய முடியாத வகையில் உடலில் தங்கி இருக்கும். எச்.ஐ.வி., வைரஸ்கள் இதுபோல நோய் எதிர்ப்பு செல்களில் நிலைத்திருந்து, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயிர் பெறும் தன்மை கொண்டது.
இதுபோலவே, ‘சார்ஸ் கோவிட் 2’ எனப்படும் கொரோனா வைரஸ்கள், நுரையீரலில் மேற்பரப்பில் தங்கிவிடக்கூடிய சாத்தியம் உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் இருக்க வாய்ப்பு உள்ளது. இது பரிசோதனைகளில் கூட கண்டுபிடிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.