கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக அளவாக பெங்களூருவில் அதிக ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் பட்டியலிடப்பட்ட 19 பெருநகரங்களில், பெங்களூருவில் 8 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 8 பேரில் 6 பேர் பெண்கள்.
டெல்லியில் ஏழு ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அகமதாபாத் நகரில் ஐந்து ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் தலா இரண்டு முறை ஆசிட் வீச்சு முயற்சி நடந்துள்ளது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பெங்களூருவில் தலைக்காதல் விவகாரத்தில் 24 வயதான எம்.காம்.பட்டதாரி பெண் மீது ஆசிட் வீசப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பெண்ணை பின்தொடர்ந்து வந்த ஆசாமி, திருமண திட்டத்துடன் அவளை அணுகியுள்ளார். ஆனால் அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அந்த பெண் மீது ஆசிட் வீசும் கொடூர செயலை அவன் மேற்கொண்டான். பின்னர் திருவண்ணாமலை ஆசிரமத்தில் பதுங்கி இருந்த அவனை போலீசார் கைது செய்தனர்