50 ஓவர்கள் கொண்ட U-19 ஆசியக் கோப்பையில் இன்றையப் போட்டியில் 8வது ஓவரிலேயே 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
19 வயத்துக்குட்பட்டோர்கான 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இன்றைய நாளில் மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
அதன் இரண்டாம் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில் நேபாளம் அணி மோசமாக பேட்டிங் செய்துவந்தது. நேபாளம் அணி வீரர்களின் ஒருவர் கூட ஒரு இலக்கு ரன்னை தாண்டவில்லை. ஆனால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் கொடுத்த எக்ஸ்ட்ரா தான் 2 இலக்க ரன்னாக இருந்துள்ளது.
ஆம் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தினாலும் 13 ரன்கள் எக்ஸ்ட்ராவாக கொடுத்துள்ளனர். நேபாளம் அணியின் அதிகபட்சமாக ஹேமந்த் தாமி 8 ரன்களும், தீபக் போஹாரா மற்றும் அர்ஜுன் குமால் தலா 7 ரன்களும் எடுத்துள்ளனர்.
இறுதியாக 23வது ஓவரில் நேபாளம் அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 52 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 7 விக்கெட்களை வீழ்த்தினார். ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங் மற்றும் அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அர்ஷின் குல்கர்னி 5 சிக்சர்கள் மற்றும் 1 பௌண்டரி என 30 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். மறுபக்கம் விளையாடி வந்த ஆதர்ஷ் சிங் 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 13 பந்துகளில் 13 ரன்களை எடுத்தார்.
இப்போட்டியில் இந்தியா 8வது ஓவர்லயே 57 ரன்களை எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.