உடைந்த ஏரி: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. விவசாயிகள் வேதனை!
Aug 21, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடைந்த ஏரி: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவரப்பட்டு பகுதியில் உள்ள ஏரி உடைந்து, விளை நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

கனமழையின் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது, இயல்பு நிலை திரும்பி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. அந்த வகையில், நடுவரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் நிரம்பி வழிந்தது. இந்த ஏரி மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும், அதிகாலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் வீட்டில் உறங்கி கொண்டிருந்த பொதுமக்கள் வெளியேறினர். இதனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காலையிலேயே கடும் அவதி அடைந்தனர்.

இந்த ஏரி ஆக்கிரமிப்பு நபர்களால் உடைக்கப்பட்டதா? அல்லது தானாக உடைந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரி உடைந்து, விளை நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags: Flooding in River
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Next Post

8வது ஓவரிலேயே வெற்றி பெற்ற இந்தியா!

Related News

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத்; சேரை வீசி தாக்கிய திமுகவினர்

மீம்ஸ்களால் வசூல் மழை; சீனாவில் விநோதம்

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies