ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் - இந்து முன்னணி அறிவிப்பு!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் நடத்துவதா? என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் கருவறை அருகே கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு பெருமாளை வணங்கியுள்ளார். அவர் சபரிமலை செல்வதற்கு ஐயப்ப விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளார்.

கோவிந்தா நாமம் எழுப்புவதைக் கண்ட அறநிலையத் துறை ஊழியர்கள் அவரோடு வாக்குவாதம் செய்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரத்தம் சொட்டச்சொட்ட கோவிலுக்குள்ளேயே பக்தர் தரையில் அமர்ந்து கதறி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் பக்தியும் இல்லை, பக்தர்கள் மீது பரிவும் கிடையாது, ஆகம விதிகளும், அடிப்படையும் தெரியாது.

வழிபாட்டுத்தலத்திற்குள் இதுபோல அவமதிப்பதும், அடித்து அச்சுறுத்துவதும் உலகத்தில் எந்த மூலையிலும் பார்க்க முடியாத காட்சியாகும். பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் எனும் பாரதியின் கூற்று நூறு சதவீதம் திராவிட மாடல் ஆட்சிக்கு பொருந்தும்.

திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதைத் தடுப்பதற்கு அநியாயக் கட்டணம் வசூலித்தார்கள். அப்பட்டமாக ஆகம விதிகளை மீறினார்கள். மடாதிபதிகளைத் துறவியர்களை அவமதித்தார்கள்.

தற்போது பழனி திருச்செந்தூரில் தொடங்கி ஸ்ரீரங்கம் வரை பக்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்குக் காரணமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பக்தருக்கு உரிய இழப்பீடு வழங்கி சகல மரியாதையோடு சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் பக்தர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Govindasrirangamhindu munanisrirangam templedevotee attacked
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – மத்திய அரசு முக்கிய முடிவு!

Next Post

உடைந்த ஏரி: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. விவசாயிகள் வேதனை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies